I Periyasamy : “காங்கிரஸ் கேட்பது அவர்களின் விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” என அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
I Periyasamy : “காங்கிரஸ் கேட்பது அவர்களின் விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” என அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.

Published on: January 11, 2026 at 6:01 pm
சென்னை ஜனவரி 11, 2026; “தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” என திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான பெரியசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கோரிக்கை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உள்ளது; கடந்த காலங்களில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. எனினும் இந்த கூட்டணி பிரியும் நிலை ஏற்பட்டால் அது இருவருக்கும் பாதகமான நிலையை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்த திமுக தோல்வியும் அடைந்துள்ளது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன; எனினும் இந்த சலசலப்புக்கள் கடைசி நேரத்தில் மாறிவிடும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் இல்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்தே ஒலிக்க தொடங்கியுள்ளன. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர், தமிழ்நாட்டின் கடன் நிலைமையே உத்திரபிரதேசத்துடன் ஒப்பிட்டு பேசினார்; அவர் வெளியிட்ட தரவில் உத்தர பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகரித்து காணப்பட்டது.
இது திமுகவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது; இது தொடர்பாக பலரும் திமுகவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கூறுவது குறித்து திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பெரியசாமி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி, ” தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதில் மு.க ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது.
ஆட்சியில் பங்கு கேட்பது, காங்கிரசாரின் விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுபோன்று இருந்ததில்லை” என்றார்.
இதையும் படிங்க: அன்புமணி மீது நடவடிக்கை.. தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com