Minister K.N. Nehru: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என உரக்க கூறுகிறோம் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Minister K.N. Nehru: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என உரக்க கூறுகிறோம் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Published on: March 31, 2025 at 7:39 am
Updated on: March 31, 2025 at 7:46 am
சென்னை மார்ச் 31 2025: 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு க ஸ்டாலின் வருவார் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு தனது பேச்சின் போது விஜயை கடுமையாக சாடினார். நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன நடிகர் விஜய், ‘மக்களை சந்திக்காதவர்’ என்றார்.
முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜய், திமுக மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து பேசினார்.
பாரதிய ஜனதா கட்சியை பிளவுவாத கட்சி என கூறிய நடிகர் விஜய் தமிழ்நாட்டை பிரதமர் மோடி கேர்ஃபுலாக கையாள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து முக ஸ்டாலின் குறித்து பேசிய விஜய், “குடும்ப ஊழல் ஆட்சி நடத்தி வருகிறார்” என்றார். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை மக்கள் தோல்வி ஊராட்சி செய்வார்கள் என்றும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்துகிறார்; அமைச்சர் சக்கரபாணி!
இது தொடர்பாக அமைச்சர் கே என் நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, ” 2026 இல் மு க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார்” என்றார்.
தொடர்ந்து நடிகர் விஜய் மக்களை சந்திக்காதவர் என விமர்சித்த அமைச்சர் கே என் நேரு, ” பரங்கில் கூட்டம் நடத்திக் கொண்டு விஜய் எங்களை பார்த்து எதிரி என்கிறார்” என பதில் அளித்தார்.
2023 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க திமுக, அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இம்முறை நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொருத்தமட்டில் கூட்டணி பலமாக உள்ளது. அந்தக் கட்சியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வைக்கின்றன.
இதற்கிடையில் பாரதிய ஜனதாவும் அதிமுகவும் மீண்டும் கூட்டணி சேரும் என்ற கருத்தும் மேலோங்குகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை.. கனிமொழி ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com