Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: June 16, 2025 at 6:33 pm
சென்னை, ஜூன் 16 2025: டாஸ்மாக் குற்றச் செயல் அல்வ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலூர் சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி 2016ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினர் ஈடுபட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்தும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், “டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல” எனவும் நீதிபதிகள் கூறினார்கள்.
குற்றச் செயல் அல்ல
தொடர்ந்து நீதிபதிகள், “டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல; டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது” எனக் கூறினார்கள்.
மேலும், “அமைதியாக போராடும் தனி நபர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி பிணக்கு.. இதுதான் பாமக தொண்டர்களின் விருப்பம்.. ஜி.கே மணி.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com