M Subramanian | VCK | மதுவிலக்கு மாநாட்டிற்கு விசிக அழைத்து அதிமுக கலந்துகொண்டால் நல்லதுதான் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
February 6, 2025
M Subramanian | VCK | மதுவிலக்கு மாநாட்டிற்கு விசிக அழைத்து அதிமுக கலந்துகொண்டால் நல்லதுதான் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Published on: September 10, 2024 at 10:02 pm
M Subramanian | VCK | திமுக பவளவிழா மாநாடு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மது விலக்கிற்கு எதிராக அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுவது குறித்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இது முழுக்க முழுக்க ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் முப்பெரும் விழா. திமுக தோன்றிய நாள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், குறிப்பாக இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக திமுகவின் பவள விழா என்கிற வகையில் மட்டுமே பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. மற்றவை குறித்து பிறகு பதிலளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், முதல்வரின் எண்ணம், கருத்து, செயல்திட்டம் அனைத்தும் 2026 ஆம் ஆண்டில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இலக்கோடு சென்று கொண்டிருக்கிறது. நிச்சயம் அதற்கு இம்மாநாடு ஒரு அடிப்படை நிகழ்வாக இருக்கும் என்றார்.
அதிமுகவுக்கு திருமா அழைப்பு
தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகளின் மது விலக்கு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிலைப்பாட்டை தாண்டி மது விலக்கிற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் என்ற கேள்விக்கு, அவர்கள்(விசிக) அழைத்து அவர்கள் (அதிமுக) போனால் நல்லது தானே. நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்தால் நல்லதுதான். மாநாடு நடத்துவதிலும் ஒன்றும் தவறில்லை என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, 2017ஆம் தொடங்கி இதுவரை முதல்வர் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டணியில் எந்த குறைபாடும் இல்லாமல் தொடர்கிறது. மேலும் பல ஆண்டுகள் இந்த கூட்டணி மிக சிறப்பாக தொடரும்” என்றார்.
இதையும் படிங்க : ‘கருணாநிதியை யாராலும் வீழ்த்த முடியவில்லை’: காரைக்குடி அரசு விழாவில் உதயநிதி பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com