அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் ஹாயாக சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோவை அவரே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் ஹாயாக சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோவை அவரே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on: September 4, 2024 at 2:40 pm
M K Stalin America Visit | உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக மு.க. ஸ்டாலின் ஆக.27ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் 17 நாள்கள் தங்குவார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
Evening’s calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLq
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
மேலும், செப்.7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் ஹாயாக பாட்டு பாடிய படி சைக்கிளில் பயணம் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
இதையும் படிங்க : ‘அமெரிக்காவில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’: மு.க. ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com