திருத்தணி – திருச்செந்தூர் அதிநவீன சொகுசு பேருந்து சேவை: எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

Luxury bus service from Thiruttani to Tiruchendur: திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அதிநவீன சொகுசு பேருந்து சேவை துவங்கியுள்ளது.

Published on: April 7, 2025 at 2:38 pm

திருத்தணி, ஏப்ரல் 07 2025, நீண்ட நாட்களாக பொதுமக்கள் அளித்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அதிநவீன சொகுசு பேருந்து சேவை துவங்கியுள்ளது. இந்த பேருந்து சேவையை திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் முதல்வரின் உத்தரவின் படியும் திருத்தணியில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு 191 HUD என்னும் விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சொகுசு பேருந்து சேவையை திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.

இந்தப் பெருந்து சேவையானது திருத்தணியில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு மறுநாள் காலை 8 45 மணிக்கு வந்தடையும். அதேபோல் திருச்செந்தூரில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு மறுநாள் காலை 8 45 மணிக்கு சென்றடையும். இந்த அதிநவீன சொகுசு பேருந்து தினசரி இயக்கப்படும். இதற்கான கட்டணம் ரூபாய் 640 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி. கே. சிவக்குமார் நீட்டிப்பு

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com