L Murugan: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க தயாரா என மு க ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
L Murugan: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க தயாரா என மு க ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: January 3, 2026 at 11:50 am
சென்னை ஜனவரி 3, 2026; கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம் குறித்து விவாதிக்க தயாரா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் சவால் விடுத்துள்ளார். இத்தொடர்பாக பேசிய அவர், ” கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தற்போது வேலை நாட்கள் 100 என்பதிலிருந்து 125 நாட்களாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் குறித்து பொய்யான அவதூறுகளை திமுக மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது; இத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தப் போவதாக அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உண்மை இல்லை; இந்த திட்டம் குறித்து என்னுடன் விவாதிக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் தற்போது விக்சித் பாரத் ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தவும் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி.. வீடுதோறும் விஜய் முழக்கம்.. ஜே.சி.டி பிரபாகர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com