Jawahirullah | “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
February 18, 2026
Jawahirullah | “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Published on: October 8, 2024 at 9:02 pm
Jawahirullah | ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த முடிவை அம்மாநில மக்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு இருக்க வேண்டும்.
இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் எழுச்சி புது நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. அதன் வாக்கு வங்கி அதிகரிப்பு இந்தியா கூட்டணியின் எதிர்காலத்திற்குப் புது உத்வேகத்தை வழங்கியிருக்கிறது.
பிளவுவாத அரசியலைத் தவிர்த்து ஒற்றுமையுடன் முன்னேற இந்தத் தேர்தல் முடிவுகள் வழி வகுத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ‘தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: சநதேகம் கிளப்பும் காங்கிரஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com