Pongal gift: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்துள்ளது; இதன் மூலம் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
Pongal gift: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்துள்ளது; இதன் மூலம் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.

Published on: January 9, 2026 at 3:26 pm
Updated on: January 9, 2026 at 3:27 pm
சென்னை ஜனவரி 9, 2026: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு ரொக்க தொகையை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து பொங்கல் திருவிழா களைகட்ட தொடங்கி விடும். முதல் நாள் போகி இரண்டாம் நாள் பொங்கல் மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் என தமிழ்நாட்டில் பொங்கல் விழா பிரசித்தம்.
இந்த பொங்கல் விழா பண்டைய காலத்தில் இந்திர விழா என தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நிலையில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று ஆயிரம் ரொக்க பரிசினை அறிவித்தது. இந்த பரிசின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளார்கள். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் கரும்பு மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் வழங்கும்; இந்த பொங்கல் பரிசினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஜனநாயகன் பேனர் விழுந்து ஓய்வு ஊழியர் காயம்.. மூன்று பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com