Rain alert: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain alert: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: September 26, 2025 at 5:36 pm
சென்னை, செப்.26, 2025: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்” என்பதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் காற்று அதிகம் வீசும் நாள்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை.. செங்கோட்டையன் திட்டவட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com