All party meeting on March 5 2025: முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2025 மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் தாமாக பங்கேற்காது என தெளிவுபடுத்தி உள்ளார் ஜி கே வாசன்.
All party meeting on March 5 2025: முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2025 மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் தாமாக பங்கேற்காது என தெளிவுபடுத்தி உள்ளார் ஜி கே வாசன்.
Published on: March 2, 2025 at 12:40 pm
சென்னை மார்ச், 2 2025: இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் சீரமைப்பு தொடர்பாக கவலை தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்தத் திட்டத்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டினார். மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படுவதால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சரியாக கடைபிடித்த தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் திருமண வீட்டில் இதனை தெரிவித்த மு.க ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி தரப்பில் அனைத்து கட்சிக் கூட்டம் மார்ச் ஐந்தாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இதைவிட பெண்களைக் கேவலமாக பேச முடியாது.. சீமானுக்கு எதிராக கொந்தளித்த கனிமொழி!
இந்த நிலையில் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என தெளிவுபடுத்தி உள்ளார் அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன். இது தொடர்பாக ஜிகே வாசன், “தமிழ்நாட்டில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுகின்றனர். 2025 மார்ச் ஐந்தாம் தேதி நடைபெறும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீட் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பலரும் உள்ளனர் என்பதையும் ஜி கே வாசன் சுட்டிக்காட்டினார். திமுக அரசின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது என ஏற்கனவே அக்கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை மு.க ஸ்டாலின் சிதற விடமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com