Annamalai: அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai: அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published on: March 4, 2026 at 11:51 am
சென்னை, மார்ச் 4 2026: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.
அய்யா உண்டு! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டை கொலை.. மேலும் இருவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com