Kanyakumari | முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோவில் கொண்டுள்ள பகவதி அம்மன் திருக்கோவிலின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை திருக்கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் சில பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். மேலும் சில பக்தர்கள் கன்னியாகுமரியில் தரிசனம் செய்து விட்டு ஐயப்ப சுவாமியை காண செல்வதும் வழக்கம்.
இதனால் கன்னியாகுமரியில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நற்செய்தியாக, குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பர்கள் 12 30 மணிக்கு சாத்தப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நண்பகல் அரை மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நடை ஆனது நண்பகல் 1:00 மணிக்கும் இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என…
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்….
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்