Edappadi Palaniswami: இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Edappadi Palaniswami: இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: April 12, 2025 at 9:44 pm
Updated on: April 12, 2025 at 10:19 pm
சென்னை ஏப்ரல் 12 2025: ” தமிழ்நாட்டை வஞ்சித்த மு க ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், ” பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள, ஊழலுக்கு ஆப்பு அடிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ” பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்றால் பூச்சாண்டி காட்டியே மு க ஸ்டாலின் நிர்வாக திறனற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து, ” தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலைகள், தனியாக வசிக்கும் முதியோர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடித்தால் உள்ளிட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி உள்ள எடப்பாடி பழனிச்சாமி பால் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
பா.ஜ.க. பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த திரு. ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும் ?
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) April 12, 2025
– மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/rFP2guubwj
தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக பொம்மை முதலமைச்சராக மு க ஸ்டாலின் ஆட்சியை நடத்திவிட்டு தற்போது கச்சத்தீவு தொகுதி மறு சீரமைப்பு நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்து வந்த சிரமங்களை மடைமாற்ற முயல்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து திமுகவை விஞ்ஞான ஊழல் என விமர்சித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்; ஸ்டாலினும் அவரது குடும்பமும் மந்திரிகளும் கடலையே குடித்திருக்கிறார்கள். 2026 சட்டமன்ற பொது தேர்தலில் இந்த கொள்ளை கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்.. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.. கனிமொழி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com