டெல்லி குளிரில் சூடான அரசியல்.. அமித் ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு!

Edappadi Palaniswami meeting with Amit Shah: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

Published on: January 7, 2026 at 10:52 pm

Updated on: January 7, 2026 at 11:31 pm

புதுடெல்லி, ஜனவரி 7, 2025: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக சேர உள்ள கட்சிகள் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ₹4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக கவர்னர் R N ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இது தொடர்பாகவும் உள்துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி பேசினார் என்ற தகவலும் உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று காலை அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவினர் இணைந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக (அன்புமணி) இணைந்திருப்பது அந்தக் கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இதையும் படிங்க; அமித் ஷா வருகை மு.க ஸ்டாலினை பாதித்துள்ளது.. வானதி சீனிவாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com