Duraimurugan: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வெளியே வர பயம் என திமுக மூத்த அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
Duraimurugan: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வெளியே வர பயம் என திமுக மூத்த அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
Published on: October 7, 2025 at 7:50 pm
வேலூர், அக்.7, 2025: தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை (அக்.7, 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்க்கு வெளியே வர பயம் என்றார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், “தான் குற்றம் புரியவில்லை என்றால், விஜய் தன் தோழர்களோடு துயர சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு போயிருக்க முடியும்” என்றார். மேலும், “தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், அவருக்கு வெளியே வர பயம்” எனவும் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் செப்.27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு பின்னர் நடிகர் விஜய் முடங்கிப்போய் உள்ளார். இது தொடர்பாக ஒரே ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜயின் கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். மேலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி அரசு கேபிளில் இருந்து நீக்கம்? அண்ணாமலை குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com