Tamil Nadu fishermen issue: “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu fishermen issue: “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: December 25, 2025 at 11:21 pm
சென்னை, டிச.25, 2025: பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த 22-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றன. நள்ளிரவில் இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மன்னார் கடல் பகுதியில் இருந்து சுற்றுக்காவல் வந்த இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறு சீரமைப்புக்கான நிதி உதவிகளையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறது. டிட்வா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1100 டன் நிவாரண பொருட்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி உதவியது.
தற்போதும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூபாய் 4,050 கோடி நிதி உதவி கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 23-ஆம் தேதி கொழும்புவில் வழங்கியுள்ளார். இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு துணையாக நிற்க வேண்டியது இந்தியாவின் கடமை என குறிப்பிட்டு இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளையும் செய்து தருகிறது. அண்டை நாடு என்கிற போது அந்நாடு பாதிப்புக்குள்ளாகும் போது, இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை தான். அதேசமயம் நம் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்திய வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இந்திய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தி.மு.க.வை வீழ்த்த முடியாது.. பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் தெரியாது.. அமைச்சர் ரகுபதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com