MK Stalin: “எனது பிறந்தநாளையொட்டி ஆர்வமிகுதியால் கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்” என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
MK Stalin: “எனது பிறந்தநாளையொட்டி ஆர்வமிகுதியால் கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்” என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: February 27, 2026 at 4:07 pm
சென்னை, பிப்.27, 2026: “7ஆவது முறையும் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் அதுவே எனக்கு நீங்கள் வழங்கும் பிறந்தநாள் வாழ்த்து” என தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க ஸ்டாலின் பிறந்தநாள்
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் தி.மு.க தொண்டர்களிடம், “எனது பிறந்தநாளையொட்டி ஆர்வமிகுதியால் கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ள மு.க ஸ்டாலின், “7ஆவது முறையும் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் அதுவே எனக்கு நீங்கள் வழங்கும் பிறந்தநாள் வாழ்த்து” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூம் உள்ளது.
இதற்கிடையில் தனது கட்சி கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் மு.க ஸ்டாலின் இறங்கியுள்ளார். இன்று ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாரிசோடு வாரிசு கட்சியில் ஓ.பி.எஸ்.. ‘வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்’..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com