DMK Public Meeting: நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
DMK Public Meeting: நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on: March 8, 2025 at 9:52 am
Updated on: March 8, 2025 at 9:58 am
சென்னை, மார்ச் 08: நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க கூடும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரச்சனையை மு.க ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொளத்தூரில் திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டின் இல்ல திருமண நிகழ்ச்சியிலும் இந்த பிரச்சனையை எழுப்பினார்.
அப்போது, “குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக கடைப்பிடித்த தென் மாநிலங்கள் தொகுதி மறு சீரமைப்பு காரணமாக பாதிக்கப்பட உள்ளன. இந்த தொகுதி மறு சீரமைப்பு காரணமாக வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கக்கூடும்” என்றார்.
இந்த நிலையில் நேற்று ( மார்ச் 7 2025) இந்த தொகுதிகள் மறு சீரமைப்பு தொடர்பாக மு க ஸ்டாலின், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.
‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் இந்த பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் மு க ஸ்டாலின் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை.. தி.மு.க.வுக்கு பயம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com