புதுச்சேரி பிப்ரவரி 3, 2026; புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது; இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நாராயணசாமி, ” புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது; இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்றார்.
புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக கூட்டணி பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதே நேரம் இக்கூட்டத்தில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் கலந்து கொண்டன.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தரப்பு மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க; புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்.. 11பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
Ajith Kumar: வட்டாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படம் என இயக்குனர் சரணிடம் அஜித் குமார் கூறியுள்ளார்….
Dhurandhar 2 box office collection: துரந்தர் 2 உலகளாவிய வசூல் 2ஆம் நாள்: ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்தப் படம் ₹370 கோடி வசூலித்து,…
Mani Ratnam’s next Film: இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….
LIK: நடிகர்- இயக்குனர் பிரதீப் ரங்கநாதனனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….
Divyanka Tripathi: பிரபல தொலைக்காட்சி நடிகை டிவ்யாங்கா திரிபாதி தனது 41வது வயதில் கர்ப்பமாக இருப்பதை மார்ச் 19, 2026 அன்று அறிவித்தார்….
Border 2 OTT release: ரூ.400 கோடிகள் வரை வசூலித்த பார்டர் 2 திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்