ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: December 11, 2024 at 8:56 am
Rameswaram | தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (10-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை -தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 14-ந்தேதிவரை வடகிழக்கு பருவமழையின் மழைப்பொழிவு தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டு படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம் அலர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com