Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

Published on: March 14, 2026 at 11:17 pm
புதுச்சேரி மார்ச் 14 2026; புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2021 சட்டமன்றத் தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்த தேர்தலை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் திமுகவுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன; மேலும் மற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டது.
இந்த நிலையில் இம்முறை காங்கிரஸ் மற்றும் திமுக சரிசம இடங்களில் போட்டியிடும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன; இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க; ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com