Ilayaraja: இசைஞானி இளையராஜாவுக்கு 2025 ஜூன் இரண்டாம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அதிரடியாக சட்டப்பேரவைகள் அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Ilayaraja: இசைஞானி இளையராஜாவுக்கு 2025 ஜூன் இரண்டாம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அதிரடியாக சட்டப்பேரவைகள் அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Published on: March 27, 2025 at 11:06 pm
சென்னை மார்ச் 27 2025: இசைஞானி இளையராஜாவுக்கு 2025 ஜூன் இரண்டாம் தேதி சென்னையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று ( மார்ச் 27 2025) அதிரடியாக அறிவித்தார்.
இசைஞானி இளையராஜா 2025 மார்ச் எட்டாம் தேதி லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். வேலியண்ட் என்ற பெயரில் இந்த சிம்பொனி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் இளையராஜா படைத்தார்.
இளையராஜாவின் இந்த சாதனையைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிய தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி அவரை அழைத்து பாராட்டினார். மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில தலைவர்கள் இளையராஜாவின் வீடு தேடி சென்று அவரை பாராட்டினார்கள்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இளையராஜாவின் வீடு தேடி சென்று அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் இசைஞானி இளையராஜாவுக்கு 2025 ஜூன் இரண்டாம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என தெரிவித்துள்ளார். இது உலகெங்கிலும் உள்ள இளையராஜா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் என்பவரது இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆங்கிலம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பரபரப்பு ஆக்க்ஷன் காட்சிகள்; எதிர்பாராத வில்லன்.. எம்புரான் திரை விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com