Emburaan movie review: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Emburaan movie review: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Published on: March 27, 2025 at 10:46 pm
Updated on: March 27, 2025 at 10:50 pm
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தியேட்டர்களில் இன்று (மார்ச் 27 2025) வெளியான திரைப்படம் எம்புரான். 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
இந்தப் படத்தின் கதை என்ன?
லூசிபர் படத்தில் இருந்து எம்புரான் படத்தின் திரைக்கதை சற்று வித்தியாசமானது. யாரும் எதிர்பாராத விதத்தில் டோமினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் நல்லாட்சி தருவார் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் ஊழலில் சிக்கித் தவிக்கிறார்.
மறுபுறம் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதை நிழல் உலக தாதாவான மோகன்லால் தடுத்து நிறுத்துகிறார். படத்தின் இடைவேளைக்கு முன்பு வரை மோகன்லால் நிழல் உலக தாதாவாக கருப்பு கோட் சூட்டில் கவனம் கொள்கிறார்.
மறுபுறம் மஞ்சு வாரியர் தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் பெறுகிறார். அவருக்கு இரண்டாம் பாகத்தில் சொற்ப இடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, படத்தில் எதிர்பாராத வகையில் பல்வேறு ஆக்சன் காட்சிகளும் உள்ளன. ஊழலில் சிக்கி தவிக்கும் டொமினோ தாமஸ், வேறு வழியின்றி மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்.
இதையும் படிங்க சமந்தாவுக்கு இப்படி ஒரு கனவா? நிறைவேறாமல் போச்சே.. அச்சச்சோ!
ஒரு கட்டத்தில் தனது சொந்தக் கட்சியை உதறிவிட்டு தனி கட்சி தொடங்கி, தனியான சாம்ராஜ்யம் அமைக்க நினைக்கிறார். இந்த நிலையில் படத்தின் இடைவேளைக்குப் பின்னர் வேட்டி சட்டையில் மிரட்டும் மோகன்லால், கம்பீரமான அரசியல் செய்கிறார். படத்தின் இசைக் காட்சியும் பிரம்மாண்டமாக உள்ளது.
குறிப்பாக சண்டை காட்சிகளில் இசை பிரமாதம். அதே நேரம் ஒளிப்பதிவாளர் கேமராவை பல விதங்களில் அழகாக காட்டி உள்ளார். டோமினோ தாமசின் ஒவ்வொரு வில்லத்தனமும் ரசிக்க வைக்கும். அதேநேரம் இந்தச் சமூகத்தின் மீது பயத்தையும் கொடுக்கும்.அந்த வகையில் ஒரு அரசியல்வாதியாக டோமினோ தாமஸ் மிரட்டுகிறார்.
படத்தின் பல்வேறு காட்சிகள் லண்டன், எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் வட இந்தியாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களின் அழகை கேமராவில் அழகாக திரைப்படத்தில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். அந்த வகையில் சமூக அக்கறையுடன் அரசியலை விறுவிறுப்பாக காட்டியிருக்கும் எம்புரான் வெற்றி ரகம்!படத்தில் இயக்குனரும் நடிகருமான பிரித்திவிராஜின் வருகையும் எனர்ஜி ரகம்.
இதையும் படிங்க இரவு நேர சூட்டிங்.. சாய் பல்லவி பதில் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com