கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Published on: November 20, 2024 at 2:40 pm
Kallakurichi Case | கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் நாட்டையை உலுக்கின. இந்த சாராயம் குடித்தவர்களில் 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு வழங்கியது. அதன்படி, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டன.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com