Dindigul: திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த காதலன் கைது செய்யப்பட்டான்.
Dindigul: திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த காதலன் கைது செய்யப்பட்டான்.
Published on: April 22, 2025 at 5:15 pm
திண்டுக்கல், ஏப். 22 2025: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தர்மத்துப்பட்டி-பாண்டிமலை சாலையில் அமைந்துள்ள அமைதிச் சோலை பகுதியில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு பெண்ணின் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்த பெண் மதுரையைச் சேர்ந்த மரியம்மாள்(22) என அடையாளம் காணப்பட்டார். அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த 27 வயதான பிரவின் என்ற இளைஞரும் மரியம்மாள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் மரியம்மாள் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மரியம்மாள் தன்னை திருமணம் செய்யக் கோரியபோது, பிரவின் மறுத்துள்ளார். மரியம்மாள் தொடர்ந்து திருமணத்திற்கு வலியுறுத்தியதால், ஏப்ரல் 12ஆம் தேதி, பிரவின் அவரை அமைதிச் சோலைக்கு அழைத்துச் சென்று, மரியம்மாளின் ஷாலைப் பயன்படுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், மரியம்மாளின் உடலை எரித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த கொடூரமான கொலை சம்பவத்தில், பிரவினை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்பிணியான இளம்பெண் காதலனால் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க கார் விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 2 பெண்கள் பலி: கடலூரில் பரிதாபம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com