BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published on: March 16, 2026 at 6:27 pm
சென்னை, மார்ச் 16, 2026: “ரஜினிகாந்த், ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்” என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
இதனை அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் கண்டிக்க வேண்டும்; மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர் ரஜினிகாந்த். அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல.
அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்” எனவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்? மேட்ரிக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com