Chennai TASMAC Headquarters: சென்னை டாஸ்மாக் தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 போலீசார் வரை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Chennai TASMAC Headquarters: சென்னை டாஸ்மாக் தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 போலீசார் வரை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: March 17, 2025 at 2:11 pm
சென்னை மார்ச் 17, 2025: சென்னையில் டாஸ்மாக் தலைமையகம் அமைந்துள்ளது. இது தொடர்பான பல்வேறு இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகள் நடத்தியது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டாஸ்மாக் ஆலை அதிபர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையில், டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, ” டாஸ்மாக்கில் எப்படி எப்படியெல்லாம் ஊழல் நடைபெற்றது என்பது குறித்து விளக்கமாக பேட்டியளித்தார்.
மேலும் டாஸ்மாக்கில் நடைபெற்ற இந்த ஊழலுக்கு எதிராக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2025 மார்ச் மாதம் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஆர்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று ( மார்ச் 17 2025) டாஸ்மாக் தலைமையகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கைது
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
VIDEO | Tamil Nadu: Heavy police deployment in Chennai in view of BJP's protest over alleged irregularities in Tasmac.#ChennaiNews #TamilNaduNews
— Press Trust of India (@PTI_News) March 17, 2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/ubKicA4YPO
இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம், ” இந்த டாஸ்மாக் முறைகேடில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” அடுத்த போராட்டம் தேதி குறிப்பிடாமல் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; என்ன தப்பு.. கொந்தளித்த எச். ராஜா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com