நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு திமுக மிரட்டல்.. அருண் ராஜ்!

Arun Raj: திமுக அதிகாரிகளை வைத்து தமிழக வெற்றி கழகத்தை மிரட்டுகிறது என த.வெ.க மூத்த நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Published on: February 4, 2026 at 4:11 pm

சென்னை பிப்ரவரி 4, 2026; திமுக அதிகாரிகளை வைத்து தமிழக வெற்றி கழகத்தை மிரட்டுகிறது என அக்கட்சியின் மூத்த நிர்வாகி அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்கும் விதமாக அதிமுகவும், ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலைப் பொருத்தமட்டில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் திமுக அணியிலும், பாஜக அதிமுக அணியிலும் உள்ளது. வழக்கம்போல் நாம் தமிழர் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது; 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், தனது தலைமையில் தேர்தல் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கும் கட்சி உடன் மட்டுமே கூட்டணி என தெரிவித்துள்ளது. இதனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியில் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது.

திமுக மிரட்டல்

இதற்கிடையில் திமுக தனது அதிகாரிகளை வைத்து தமிழக வெற்றி கழகத்தை மிரட்டுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். எங்களை ஒரு பேனர் கூட வைக்க அனுமதி அளிப்பதில்லை; ஒரு பேனர் நாங்கள் வைத்தால் கூட அந்த பேனரை அதிகாரிகளை வைத்து அகற்றுகிறார்கள். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒரு போஸ்டர் ஒட்டினாலும் அதை கிழித்து விடுகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க; புதுச்சேரியில், காங்கிரசுக்கு அழைப்பில்லை.. திமுக கூட்டணி கூட்டத்தில் சலசலப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com