Anbumani Ramadoss: “நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: November 17, 2025 at 2:01 pm
சென்னை, நவ.17, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல நலனுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் குப்பை எரிஉலை திட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை என்றும், அவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலையும், இயற்கைவளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை இல்லாத இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,, “நிலக்கரி அனல் மின்நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகும். குப்பை எரி உலைகளில் இருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்கள்.. உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை.. அன்புமணி ராமதாஸ்
மேலும், “சென்னையில் கொடுங்கையூர் பகுதியில் ஆண்டுக்கு 7,66,000 டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மின் உலையை ரூ.1,248 கோடி செலவிலும், அதற்கு இணையான குப்பை எரி உலையை பெருங்குடியிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அந்த பேரழிவுத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தி வருகிறது. மத்திய அரசின் புதிய விதியை பயன்படுத்தி இந்த இரு எரிஉலை திட்டங்களையும் திமுக அரசு உடனடியாக செயல்படுத்தும் ஆபத்து உள்ளது.
குப்பை எரி உலைகளை அமைப்பதை விட, குப்பையில்லா நகரங்களை அமைப்பது தான் சிறந்தது ஆகும். எனவே, நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு.. எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com