Anbumani Ramadoss : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Anbumani Ramadoss : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Published on: September 25, 2025 at 4:43 pm
சென்னை, செப்.25, 2025: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை (செப்.24) விடுத்திருந்த அறிக்கையில், “பகுஜன் சமாஜம் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்கள் அனைத்தும் தெளிவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
என்கவுன்ட்டர் ஏன்?
மேலும், “ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது” எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு கூடாது
இதையடுத்து, “இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படுவதை சி.பி.ஐ. உறுதி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால், சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கொள்கையில் உறுதி.. தி.மு.க. கூட்டணி தொடரும்.. தொல். திருமாவளவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com