Chennai: 10 கிலோ கஞ்சாவை தேடி வந்த போலீசார் பிடியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி. பரபரப்பு பின்னணி; எச்சரித்து அனுப்பிய போலீஸ்.
Chennai: 10 கிலோ கஞ்சாவை தேடி வந்த போலீசார் பிடியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி. பரபரப்பு பின்னணி; எச்சரித்து அனுப்பிய போலீஸ்.
Published on: March 23, 2025 at 12:12 pm
10 கிலோ கஞ்சாவை தேடி அலையோ அலையன்று அலைந்த போலீசாருக்கு, மது குடித்தபடி உல்லாசம் அனுபவித்த கள்ளக்காதல் ஜோடி கையில் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. மது குடித்தபடி உல்லாசம் அனுபவித்த கள்ளக்காதல் ஜோடி போலீசாரின் கையில் சிக்கியது எப்படி? எந்த அடிப்படையில் போலீசார் சம்பவ பகுதிக்கு சோதனைக்கு சென்றனர்? இது தொடர்பான பரபரப்பு பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு ஃபோன் கால் ஒன்று வந்துள்ளது. எதிர் முனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார். மிகவும் படபடப்பாக பேசிய அந்தப் பெண், குறிப்பிட்ட இடத்தின் முகவரி ஒன்றை அளித்து அந்தப் பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் பதுங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ பகுதிக்குச் சென்ற போலீசார், அங்கு மூடப்பட்டிருந்த கதவை தட்டிய போது, உள்ளே மது போதையில் இருந்த ஒரு ஜோடி போலீசார் வெளியே நிற்பதை அறிந்ததும் பதட்டத்தில் கதவை மெல்லமாகத் திறந்தது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார், கஞ்சாவை தேடி தீவிர சோதனை நடத்தினார்கள்.
எனினும் அவர்களுக்கு ஒரு சிறு பொட்டலம் கஞ்சா கூட கிடைக்கவில்லை. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அறைக்குள் இருந்த ஜோடி மது போதையில் உல்லாசம் அனுபவித்ததும்; இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதும் தெரிய வந்தது.
இதன் பின்னர் தனக்கு போன் செய்தவர் யார் என போலீசார் விசாரணையை முடுக்கிவிட்ட நிலையில், அது மது போதையில் சிக்கிய ஆணின் மனைவி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தவறான தகவல் கொடுத்த பெண்ணையும்; திருமணத்தை மீறிய உறவில் இருந்த அந்த ஆணையும் அவருடன் இருந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க தொகுதி மறுசீரமைப்பு, தென்னிந்தியா மீது தொங்கும் கத்தி: பினராய் விஜயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com