அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவது இல்லை.. திசையன்விளையில் கனிமொழி பரபரப்பு பேச்சு!

Kanimozhi campaign in Tisaiyanvilai: திசையன்விளை பஜார் பகுதியில் தி.மு கழக வேட்பாளர் மு. அப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் கனிமொழி. அப்போது, அ.தி.மு.க. ஆட்சி வரப்போவது இல்லை என்றார்.

Published on: April 13, 2026 at 10:56 pm

Updated on: April 13, 2026 at 11:01 pm

திருநெல்வேலி, ஏப்.13, 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளையில் கனிமொழி எம்.பி. இன்று (ஏப்.13, 2026) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தொகுதியின் கழக வேட்பாளர் மு. அப்பாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, “தமிழ்நாடடில் தி.மு. கழக ஆட்சியில் மகளிருக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து பேசினார். மேலும், நான் முதல்வன் திட்டம் குறித்தும் அதில் பயன்பெற்ற மாணவர்கள் பற்றியும் பேசினார்.

இதற்கிடையில் திசையன்விளையில் மகளிர் அணி நிர்வாகிகள் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அப்போது, மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியே தொடர வேண்டும் என ராதாபுரம்- திசையன்விளை தொகுதி மக்கள் உற்சாகத்தோடு முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் நிகழ்ந்த அவலங்கள் குறித்தும் கனிமொழி பேசினார். மேலும், தி.மு. கழக ஆட்சியில் ராதாபுரம் தொகுதிக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் கனிமொழி பேசினார்.

கனிமொழி பேச்சு

அப்போது கனிமொழி, “ராதாபுரத்தில் அனைவரையும் கட்டி ஆளக்கூடிய வேட்பாளர் அப்பாவு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நம்முடைய வேட்பாளர் அப்பாவு, அண்ணன் தளபதி (மு.க ஸ்டாலின்) அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. ஆகவே, நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

பெண்களுக்கான ஆட்சி

மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய கனிமொழி, இது மகளிருக்கான ஆட்சி. இந்த மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அடுத்து ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்களும் மாதம் ரூ.800 முதல் ரூ.1,000 வரை சேமிக்கிறார்கள்.

மேலும், இந்தியாவிலேயே அதிகம் வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். இவர்களுக்கான தோழி விடுதிகள் உருவாக்கி தந்திருக்கும் ஆட்சி தி.மு.க. ஆட்சி” என்றார்.

‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவது இல்லை

தொடர்ந்துப் பேசிய கனிமொழி, “2016ல் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன் என்றார். நானும் தமிழ்நாடு முழுக்க கேட்டுவிட்டேன். யாரும் செல்போன் வாங்கவில்லை.
அவர்கள் சொல்வது நடக்காது. அவர்கள் எதுவும் தரப்போவதும் இல்லை. ஏனேனில் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. ஆனால் நாம் அப்படியல்ல. லேப்டாப் திட்டம் முதல் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து திட்டங்களும் வழங்கப்படும்” என்றார்.

அப்பாவு பற்றி கனிமொழி

தமிழக சபாநாயகர் அப்பாவு முயற்சியில், “வள்ளியூர் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி சந்தை ரூ.80.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ராதாபுரத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டுள்ளன” என்றார்.

கனிமொழி வாக்குறுதி

மேலும், “நமது ஆட்சி அமைந்தவுடன் இடிந்தகரை மீனவ கிராமத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். உவரி கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். ராதாபுரம், திசையன்விளை, வடக்கன்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
தாமிரபரணி-பச்சையாறு சங்கமிக்கும் இடத்தில் புதிய அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, உபரி நீர் ராமகிருஷ்ணாபுரம் அணைக்கட்டுக்கு திருப்பப்படும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழக அரசு நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை! Assembly Election 2026

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com