EPS, 21 MLAs Targeted: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்ததற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் 21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுகவின், சி.வி சண்முகம்- வேலுமணி அணி கோரிக்கை விடுத்துள்ளது.
EPS, 21 MLAs Targeted: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்ததற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் 21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுகவின், சி.வி சண்முகம்- வேலுமணி அணி கோரிக்கை விடுத்துள்ளது.

Published on: May 14, 2026 at 7:13 pm
சென்னை, மே 14, 2026: தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அ.தி.மு.க. உள்கட்சிப் பிரச்சினையில், சி.வி. சண்முகம் தலைமையிலான பிரிவு, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அவருடன் இணைந்த 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் கோரி சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளித்துள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க. கொறடா சி. விஜய பாஸ்கர், 47 எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு அனுப்பினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அவர்கள் மீது தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்கட்சி பிரச்னை
அ.தி.மு.க. உள்கட்சி பிரச்னையில் எஸ்.பி வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரிவினை எம்.எல்.ஏ.க்களை வழிநடத்துகின்றனர். இந்நிலையில், இவர்களுடன் 25 எம்.எல்.ஏ.க்கள் இணைந்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், “இது சட்டப்படி செல்லாது” என வாதிடுகின்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 234 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், தமிழக வெற்றிக் கழக அரசு 144 வாக்குகளைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பின்போது, தி.மு.க. ஆதரவு-எதிர்ப்பு என பதிவு செய்யாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ. நடுநிலை வகித்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு எதிராக வாக்களித்ததால், அ.தி.மு.க.வில் பிரிவு தீவிரமடைந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரிவு, சட்ட ரீதியான போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அரசு வலுவான பெரும்பான்மையைப் பெற்றதால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அழுத்தம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com