Actress Ranjana Nachiyar joining TVK Party: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், தமிழக வெற்றி களமாக மாறப்போகிறது என்று கூறிய நடிகை ரஞ்சனா அக்கட்சியில் இணைய போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Actress Ranjana Nachiyar joining TVK Party: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், தமிழக வெற்றி களமாக மாறப்போகிறது என்று கூறிய நடிகை ரஞ்சனா அக்கட்சியில் இணைய போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Published on: February 26, 2025 at 12:08 pm
சென்னை, பிப்ரவரி 26, 2025; தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிரடி அரசியலுக்கு பெயர் போன நடிகை ரஞ்சனா நாச்சியார், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகியதாக விளக்கம் தெரிவித்த ரஞ்சனா நாச்சியார், அடுத்த சில தினங்களுக்குள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நடிகை ரஞ்சனா நாச்சியார், ” தமிழக வெற்றி கழகத்தில், தளபதி விஜய் தலைமையில் இன்று ( பிப்ரவரி 26 2025) அக்கச்சியில் இணைய உள்ளேன்.
இனி தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டின் வெற்றி களமாக மாறப்போகிறது. இதில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். தமிழக வெற்றி கழகத்தில் நான் இணைகிறேன்” என்றார்.
2026 சட்டமன்ற பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக வியூகங்களை வகுத்து வருகின்றன.
எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் தலை தூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணிகளை ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க 2026 விஜய் அரசியல் வியூகம் என்ன? மாமல்லபுரத்தில் கூட்டம்.. கைகோர்க்கும் பிரசாந்த் கிஷோர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com