National Education Policy 2020: ஒரு மாணவன் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும் அந்த மாணவனும் தான் தீர்மானிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார்.
National Education Policy 2020: ஒரு மாணவன் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும் அந்த மாணவனும் தான் தீர்மானிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Published on: March 6, 2025 at 12:27 am
Updated on: March 6, 2025 at 12:35 am
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று ( மார்ச் 5 2025) நடந்தது. இந்த நிலையில் நடிகரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சரத்குமார், ” தமிழக மாணவர்களின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தமிழ்நாட்டில் முன்மொழிக் கொள்கையை எதிர்த்து மக்களை திசை திருப்பும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த நவீன காலகட்டத்தில் 50 ஆண்டுகள் பின்னோக்கிய சிந்தனையை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பி உள்ள நடிகர் சரத்குமார் அரசு பள்ளி மாணவர்கள் இரு மொழிக் கொள்கைதான் படிக்க வேண்டும் என சொல்ல நீங்கள் யார் எனவும் வினா எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும் மாணவரும் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ள நடிகர் சரத்குமார் இதையெல்லாம் விடுத்து அரசு பள்ளி மாணவர்களிடம் நீ இரு மொழிக் கொள்கைதான் படிக்க வேண்டும்.
உன் தகுதிக்கு இது போதும் என்பது போல் அணை கட்டி, உங்களின் வியாபார தேவைக்காக அவர்களின் வளர்ச்சியை தடுக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமக்கல்வி எங்கள் உரிமை.
— R Sarath Kumar (@realsarathkumar) March 5, 2025
அதைக் கொடுப்பது அரசின் கடமை! #சமக்கல்வி_எங்கள்உரிமை#EqualEducationOurRight pic.twitter.com/pr4zMdVHzC
மேலும் சம கல்வி கையெழுத்து இயக்கத்தில் பெருவாரியாக மக்களை பங்கு பெறச் செய்து, ஆதரவு திரட்டுவோம் எனக் கூறியுள்ள நடிகர் சரத்குமார் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோரை முதன்மைப்படுத்தி இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தெலுங்கில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை.. மு க ஸ்டாலின் பதிலடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com