Actor Nepoleon files complaint: திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், தனது மகன் தனுஷ் பெயரில்…
Actor Nepoleon files complaint: திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், தனது மகன் தனுஷ் பெயரில்…
Published on: April 21, 2025 at 11:23 pm
திருநெல்வேலி, ஏப்.21 2025: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “என் மகன் தனுஷ் உடல் நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்; மேலும் எனது மருமகள் குறித்தும் அவதூறு பரப்புகிறார்கள். என் மகனும், நானும் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறோம்.
ஆனால் அவர்களின் உடல் நலன் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு ஜப்பானிலும் வீடு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் சமீபத்தில் கனிமொழி, நெப்போலியனை சந்தித்தார். அப்போது, நெப்போலியன் மகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இவருக்கு 2024ஆம் ஆண்டு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்களுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :திருநெல்வேலி டூ டெல்லி நிஜாமுதீன் ஸ்பெஷல் ட்ரெயின்: நேரம், தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com