Rowdy Alvin in Nagercoil |கோயம்புத்துரில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் மீது நாகர்கோவிலில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
February 6, 2025
Rowdy Alvin in Nagercoil |கோயம்புத்துரில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் மீது நாகர்கோவிலில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: September 21, 2024 at 2:22 pm
Updated on: September 21, 2024 at 4:59 pm
Rowdy Alvin in Nagercoil | கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ரவுடி ஆல்வின் என்பவரை போலீசார் இன்று சுட்டுப் பிடித்தனர். போலீசாரை தாக்கி ரவுடி ஆல்வின் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இரண்டு காலிலும் துப்பாக்கி குண்டு காயத்துடன் ரவுடி ஆல்வின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பத்தில் தொடர்புடைய ரவுடி ஆல்வின் மீது நாகர்கோவிலில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதாவது, குமரி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஆல்வின் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஓட்டல் அதிபர் வினோத்குமார் கொலை வழக்கு மற்றும் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஜெயசிங் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், வடசேரி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் ஆல்வின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது தவிர சுசீந்திரம், வடசேரி, தென்தாமரைகுளம் போலீஸ் நிலையங்களிலும் ஆல்வின் மீது வழக்குகள் உள்ளன. அந்த வகையில், குமரி மாவட்டத்தில் 8 வழக்குகள் ஆல்வின் மீது உள்ளது.
இதற்கிடையில், 2023-ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை வழக்கில் ஆல்வினை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில், ஆல்வின் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் அவரை போலீசார் இன்று சுட்டுப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து எஸ்.பி பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “குற்றவாளிகள் மற்றும் ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதற்கு காவலர்கள் துப்பாக்கி எடுத்து செல்வதும் ‘Part of the Duty’தான்.
காவல்துறை கண் எதிரே கொலை போன்ற பெரிய குற்றங்கள் நடக்கக் கூடாது. அப்படி நடக்கும் சமயங்களில் காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், “பயங்கர குற்றவாளிகளை நோட்டம் விடும் போது காவலர்கள் தங்களுடைய தற்காப்புக்காகவும் துப்பாக்கியை எடுத்து செல்கின்றனர்.
துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்து செல்வதில்லை. ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை தாண்டி காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்காது” என்றார்.
இதையும் படிங்க : ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com