Thoothukudi: தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Thoothukudi: தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Published on: September 19, 2025 at 10:06 pm
தூத்துக்குடி, செப்.19, 2025: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த சபரி மகன் இசக்கிமுத்து (55/25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
இவர் மீது, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று (செப்.19, 2025) குற்றவாளி இசக்கிமுத்து என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
பாராட்டு
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் ரபிலா குமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க : விஜய் வீட்டில் வெடிகுண்டு.. ?மோப்ப நாயுடன் போலீசார் சோதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com