TVK Anand: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
TVK Anand: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Published on: October 1, 2025 at 3:05 pm
சென்னை, அக்.1, 2025: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்படுள்ளன. இந்நிலையில், ஆனந்த் ஏற்காடு மலை கிராமத்தில் பதுங்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்ய தீவிரம்
இதற்கிடையில் த.வெ.க ஆனந்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக த.வெ.க ஆனந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், த.வெ.க ஆனந்த் சென்னையிலும் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னையிலும் தங்களது வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு ஏன்?
2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்திய நிலையில், த.வெ.க ஆனந்த் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனு
இந்த நிலையில் ஆனந்த் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக் கிழமை (அக்.3, 2025) விசாரணைக்கு வருகிறது.
விஜய் விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அதில் கரூரில் மட்டும் இப்படி நடந்தது ஏன்? இன்னும் வலிமையாக அரசியல் பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :எண்ணூரில் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com