Chennai சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Chennai சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Published on: September 24, 2025 at 4:40 pm
சென்னை, செப்.24, 2025: சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வருமாறு:-
கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்த பழனி என்பவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், பழனி காவல்நிலையம் சென்று வீடு திரும்பியதும் மரணம் அடைந்ததார் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், சப்- இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ), மற்றும் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
மரணத்துக்கு என்ன காரணம்?
இந்த நிலையில் இது தொடர்பாக நடந்த ஆர்.டி.ஓ விசாரணையில், போலீசார் தாக்கியதே மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஆர்.டி.ஓ விசாரணையில் இவ்வாறு தெரியவர இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்த ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் மனோகரன், ஹரிஹர சுப்பிரமணியன் மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில், இரு காவலர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com