Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Published on: October 5, 2024 at 8:15 am
Updated on: October 5, 2024 at 9:28 am
Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் வள்ளியூர் நகராட்சி அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் மிக பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குகைவரை கோயிலாக அமைந்துள்ளது. இக்கோயிலை பற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பாடலில் எழுதியுள்ளார்.
இந்த வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,11,637 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 15,424 ஆக உள்ளது. மேலும் பழங்குடி மக்கள் தொகை 328 ஆக உள்ளது.
இந்த 18 ஊராட்சி ஒன்றியத்தில் தெற்கு வள்ளியூர் ஊராட்சி வருகிறது. இந்த ஊராட்சியை வள்ளியூர் நகராட்சியுடன் இணைக்க கடம்பன்குளம் உள்ளிட்ட 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்படும் வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் கிராம ஊராட்சியினை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தெற்கு வள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com