Rameswaram | எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Rameswaram | எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Published on: October 27, 2024 at 12:21 pm
Rameswaram | நெடுந்தீவு அருகே எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகு மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படையிலனர் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக மீனவர்கள் நலனுக்கான இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நாளை மறுநாள் 29-ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது எத்தகைய அணுகுமுறை? என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதோ? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, அவர்களின் படகுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க சென்னை – திருநெல்வேலி தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரயில் ; தென்னக ரயில்வே அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com