Womens T20 World Cup 2024 final | மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை தனதாக்கியது.
Womens T20 World Cup 2024 final | மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை தனதாக்கியது.
Published on: October 21, 2024 at 7:29 am
Updated on: October 21, 2024 at 7:30 am
Womens T20 World Cup 2024 final | ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 2024) நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 158 ரன்களை குவித்தது.
இதை அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது.
தென் ஆப்பிரிக்காவிற்கு பேட்டிங் வரிசை சரியாக அமையவில்லை. தொடக்கம் முதலே ஆட்டம் கண்டது. அந்த அணியின் கேப்டன் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்பரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 126 ரன்களுக்கு 9 விக்கெட் களை இழந்து தென்னாப்பிரிக்கா பரிதாபமான தோல்வி தழுவியது.
இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தித்திப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 7 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முகமது சிராஜ்-க்கு பதிலாக இவர்; முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com