PV Sindhu: துபாயில் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக பி.வி. சிந்து கூறியுள்ளார்.
PV Sindhu: துபாயில் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக பி.வி. சிந்து கூறியுள்ளார்.

Published on: March 1, 2026 at 4:38 pm
துபாய், மார்ச் 1 2026: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேல் படைகளும் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தனது அணியினருடன் உள்ளார்.
விமான நிலையத்திற்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்தது . இதனால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சிந்து தனது எக்ஸ் தள பதிவில், தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது சில மணி நேரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் நாங்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு அருகில் தாக்குதல் நடந்தது.
எங்கள் பயிற்சியாளர் அங்கிருந்து விரைவாக ஓட வேண்டி இருந்தது. எங்கள் அனைவருக்கும் இது மிகவும் பதட்டமான மற்றும் பயமுறுத்தும் தருணம். துபாய் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு நன்றி. நாங்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் நம்ப முடியாத ஆதரவு மற்றும் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியதற்கு சிறப்பு நன்றி. நாங்கள் சிறிது நம்பிக்கையுடன் இருக்கவும் முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டி-20 உலகக் கோப்பை.. இங்கிலாந்து, நியூசிலாந்து இன்று மோதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com