Paris Paralympics | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.
Paris Paralympics | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.
Published on: September 4, 2024 at 10:42 am
Paris Paralympics | Mariyappan Thangavelu | ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றுவரகின்றன. இதில் ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் ஷரத் குமார் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.
இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த எரெஸ் ஃப்ரெச் என்பவர் 1.94 மீட்டர் தாண்டி முதல் இடத்தை பிடித்தார். இரண்டாம் இடம் பிடித்த ஷரத் குமார் 1.88 மீட்டரும், மாரியப்பன் 1.85 மீட்டரும் தாண்டி இருந்தனர்.
மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று இருந்தார்.
அந்த வகையில் 3 பாராலிம்பிக்கிஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
பாரீஸ் பாராலிம்பிக்ஸில் இந்திய அணி 3 தங்கப் பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம் மற்றும் 10 வெண்கல பதக்கத்துடன் 19வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மோடி, “ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்.
Congratulations to Mariyappan Thangavelu on winning the Bronze medal in the Men's High Jump T63 event. It is commendable that he has won medals in three consecutive editions of the Paralympics. His skills, consistency and determination are exceptional. #Cheer4Bharat pic.twitter.com/RULJlYYSVP
— Narendra Modi (@narendramodi) September 4, 2024
தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. அவரது திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவை விதிவிலக்கானவை” எனத் தெரிவித்துள்ளார்.
Three cities, three Paralympics, three medals! Mariyappan Thangavelu does it again!
— Kiren Rijiju (@KirenRijiju) September 3, 2024
From Rio 2016 to Tokyo 2020 & now in Paris 2024 — another glorious medal in the Men's High Jump T63 winning Bronze Medal.
A legacy etched in pure determination.
The world witnesses your… pic.twitter.com/fmKBKpSpXo
இதேபோல் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவிததுள்ளார்.
இதையும் படிங்க : ‘எனது குடும்பத்தை சந்திக்க வந்துள்ளேன்’: விவசாயிகள் போராட்டத்தில் வினேஷ் போகத்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com