PCB Complain against Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரில் இன்று (செப்.26, 2025) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
PCB Complain against Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரில் இன்று (செப்.26, 2025) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
Published on: September 26, 2025 at 1:25 pm
துபாய், செப்.26, 2025: ஆசியக் கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் வீரர்களின் மோதல்களுக்குப் பிறகு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் புகார் அளித்தனர்.இந்நிலையில், செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) புகார் ஒன்றை அளித்துள்ளது.
முன்னதாக, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ஆயுதப்படை ராணுவத்தின் துணிச்சலுக்கு அர்ப்பணித்தார். மேலும், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அணி நிற்கிறது” என்றார்.
இதற்கு எதிராக பாகிஸ்தான் புகார் அளித்தது.இந்த விவகாரத்தில் இன்று (செப்.26, 2025) தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் போட்டிக்கு முன்பு இரு அணிகளும் கைகுலுக்க வேண்டாம் என்று சூர்ய குமார் யாதவ் கூறியதாக பாகிஸ்தான் புகார் அளித்தது.
மேலும், போட்டி நடுவர் பைக்ராஃப்டை நீக்க வேண்டும் என்றும் பிசிபி கோரியது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு பாகிஸ்தான் அணி வருவதையும் தாமதப்படுத்தியது.இந்நிலையில், பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்ட பிறகு அது கைவிடப்பட்டது.
தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பிசிபி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஐசிசியின் சர்ச்சைக்குரிய போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர், பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கருண் வெளியே, படிக்கல் உள்ளே.. நாயருக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் அகர்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com