ஸ்பின் பிட்ச்-ஐ தேர்வு செய்தது ஏன்? பாகிஸ்தான் பயிற்சியாளர் ஓபன் டாக்!

Pakistan Coach Hesson : பாகிஸ்தான் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்பின் பந்துவீச்சுக்கு ஏற்ற பிட்ச்-ஐ தேர்வு செய்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

Published on: June 3, 2026 at 4:36 pm

இஸ்லாமாபாத், ஜூன் 3, 2026: பாகிஸ்தான் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்பின் பந்துவீச்சுக்கு ஏற்ற பிட்ச்-ஐ தேர்வு செய்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

அதில் அவர், “தென் ஆப்ரிக்காவில் எல்லா பீட்ச்-களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே ஏற்றவை என்ற கருத்து தவறானது” என்று வலியுறுத்தினார்.

மேலும், மைக் ஹெசன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவில், 2027 உலகக்கோப்பை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது என்பதால், ஸ்பின் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் இடங்களில் பாகிஸ்தான் விளையாட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார்.

அப்போது, “தென் ஆப்ரிக்காவில் எல்லா பிட்ச்-களும் வேகமாகவும் பவுன்ஸாகவும் இருக்கும் என்பது ஒரு மாயை. சில பிட்ச்-கள் அப்படியே இருக்கும், ஆனால் பல இடங்களில் ஸ்பின் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

விமர்சனங்களுக்கு பதில்

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த தொடக்கப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஹெசன், “ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஸ்பின் முக்கிய பங்கு வகிக்கும். பாகிஸ்தான் அடுத்த 18 மாதங்களில் பல்வேறு சூழல்களில் விளையாடி தயாராகும்” என்று கூறினார்.

அவர், 2021-இல் பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவில் விளையாடிய போது பார்ல் மைதானத்தில் ஸ்பின் ஆட்டத்தின் முடிவை தீர்மானித்தது என எடுத்துக்காட்டினார்.

போட்டி முடிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் இளம் வீரர் அரஃபத் மின்ஹாஸ் தனது அறிமுக ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாபர் அசாம் அரைசதம் அடித்த நிலையில், பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, பாகிஸ்தான் அணியின் ஸ்பின் பிட்ச் உத்தியை வலுப்படுத்தியது. என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com