India New zealand Test Series | இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.
India New zealand Test Series | இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.
Published on: October 15, 2024 at 4:16 pm
Updated on: October 15, 2024 at 5:31 pm
India New zealand Test Series | இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். இந்த போட்டிகள் நாளை ஆரம்பமாகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக உள்ள இந்த கிரிக்கெட் தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், அதே நேரத்தில் நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் விளையாடுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பென் சியர்ஸ் முழங்கால் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது இடத்தில் ஜேக்கப் டக்ப்பி அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க பாகிஸ்தான் மண்ணில் சம்பவம் செய்த ஜோ டூட்: இரட்டை சதம்: புதிய சாதனைகள் படைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com