World Athletics Championships 2025: 2025 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார்.
World Athletics Championships 2025: 2025 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார்.
Published on: September 18, 2025 at 7:16 pm
டோக்கியோ, செப்.18, 2025: 2025 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா, டோக்கியோவில் உள்ள ஜப்பான் தேசிய மைதானத்தில் நடந்த ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கம் வென்று வரலாறு படைத்த அதே மைதானத்தில் நீரஜ் சோப்ரா மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்தப் போட்டியில், அவரது சிறந்த முயற்சி வெறும் 84.03 மீட்டர் எறிதல் ஆக மட்டுமே காணப்பட்டது. சோப்ராவின் எட்டாவது இடம் பிடித்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட், தனது நான்காவது ட்ரையில் 88.16 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் முதலிடம் பிடித்தனர்.
இந்நிலையில், இரண்டு முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.38 மீ) இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (86.67 மீ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025: UAE அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com